ஒசி சாக்லெட்

முதல் நாளன்று பள்ளி செல்வதற்கென்று புத்தம்புதிய பள்ளிச்சீருடை அணிந்து புதிய புத்தகப்பையுடன் நின்ற மகளை வாஞ்சையுடன் தன் தோள்களில் சுமந்து கொண்டு தந்தையானவன் தன் மகளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்க தொடங்குகிறார்.
அம்மாடி பள்ளிக்கூடத்துல மற்ற பிள்ளைகளுடன் சண்டையிட கூடாது, வீட்டில் நம்ம தம்பி பாப்பா மாதிரி பள்ளியில் உன்னோடு படிக்கும் பிள்ளைகளோடும் எல்லா பிள்ளைகளுடனும் பிரியத்துடன் நடந்து கொள்ளனும். வழக்கமான உனது அம்மாவிடம் நடந்து கொள்வதைப்போல வாலு, சேட்டைகளோடு பள்ளியிலும் நடந்து கொள்ளக்கூடாது. பிறகு இவள் சேட்டைக்கார பெண் என்று ஆசிரியர்கள் குறிப்பிட நேரிடும். என் மகள் நல்ல பிள்ளை தானே.. நீ குட் கோ்ளா? பேட் கோ்ளா? என்றார் தந்தை.
நான் குட் கேர்ள் அப்பா என்றாள் அந்த குட்டிப்பெண்.
அப்புறம் முன்ன பின்ன தெரியாதவங்க யாராவது ஏதும் திண்பண்டங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிட கூடாது.என மேலும் தனது புத்திமதியை தொடர்ந்தார்
எதுக்கு அப்பா, அடுத்தவங்க தரும் திண்பண்டத்தை வாங்கி சாப்பிட கூடாது என்று அவளது சிந்தைக்கு விளங்காத ஐயத்தை பற்றிய கேள்வியை தொடுத்தாள்,
தந்தையும் கண்ணு உனககு அறிமுகமில்லாதவங்க யாராவது உன்னிடம் வந்து நான் உங்க அப்பாவுடைய சிநேகிதன் என்றோ அல்லது உங்க அம்மாவுடைய சகோதரன் என்றோ சொல்லி ஐஸ்க்ரீம் , சாக்லேட் போன்ற சுவையான திண்பண்டத்தை கொடுத்து உன்போன்ற சிறு பிள்ளைகளை ஏமாற்றி கடத்திச்சென்றுவிடுவா். என்றார்.
சிறுமி தன் கண்களை ஆச்சர்யத்தால் அகல விரித்து கடத்திப்போயிருவாங்களா? என்றாள் அச்சம் நிறைந்த வார்த்தைகளால்.
ஆமாம் பாப்பா, சின்ன பிள்ளைகளை கடத்திச்சொன்று கண், கிட்னி இப்படி எதயாச்சும் திருடிருவாங்க, பிள்ளைகள சாப்பாடு ஏதும் கொடுக்காம கஸ்டப்படுத்துவாங்க என்றார்
அவ்வேளையில் குழந்தை முந்திக்கொண்டு அப்படியென்றால் போன மாதம் ஒரு மாமா எனக்கு பிஸ்கட், ஸ்வீட் எல்லாம் கொடுத்தாரு, நீங்களும் வாங்கிக்கனு சொன்னிங்க, அந்த மாமாவும் அறிமுகமில்லாதவா் தானே என்றது,
சற்றே சுதாரித்த தகப்பன் அம்மு அப்போது நீ கீழ விழுந்திட்டு வலியால அழுதிட்டு இருந்த, அந்த மாமா உன்னை தூக்கிவிட்டு நீ வலியை மறந்து அழுகையை நிப்பாட்டுரதுக்காக அந்த அங்கிள் உனக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தார், அது உதவிடா செல்லம்,
நாம சிரமப்படும் போது உதவி செய்றது வெற, இலவசங்களை கொடுத்து ஏமாற்றுவது வெற....
இப்போது குழந்தை எதையோ புரிந்து கொண்டதை போல தலையசைத்தது..
தகப்பனும் மகளும் கதைபேசியவாறு பள்ளிக்கூடுத்தையும் அடைந்திருந்தனா். பள்ளிக்கூட வாசலில் மகளை முத்தமிட்டு நல்லா படிக்கனும், குட் கோ்ள் னு பெயரு வாங்கனும் என்றவாறு கையசைத்தார்,
திடீரென்று குழந்தைக்கு ஞானமெதும் பிறந்துவிட்டதாவென்று புரியன்று புரியவில்லை. இப்போது புது கேள்வியொன்றை தொடுத்தது,
அப்பா , அப்ப ஏன் முந்தாநாளு நீயும் அம்மாவும் மிக்ஸி, கிரைண்டர், எல்லாம் நம்ம ஊருல இலவசமா கொடுத்தாங்கனு வாங்கிட்டு வநதிங்க, என்றது,
பெத்தவன் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு அதுலாம் அரசாங்கம் மக்களுக்காக இலவசமா கொடுப்பது எல்லாரையும் போல நாமளும் வாங்கினோம், அவ்வளவு தான் என்றார்,
நம்ம வீட்டுல தான் மிக்ஸி, வாசிங்மெசின், எல்லாம் ஏற்கனவே இருக்குதே, பிறகு எதுக்கு ஃப்ரீயா கொடுத்தத வாங்குனிங்க, இது உதவி இல்லயே, இலவசம் தானே என்று அசாத்திய கேள்விகளை அள்ளி வீசியது. குழந்தை,
சரி சரி ஈவ்னிங் பெசலாம் , க்ளாஸ் லேட்டா போனா மிஸ் திட்ட போராங்க என்று குழந்தையை ஏமாற்றி வகுப்பிற்கனுப்பிவிட்டு நடையை கட்டினான் இலவசத்திற்கும் உதவிகளுக்கும் வெறுபாமு காணமுடியாத தகப்பன் சற்றே குழப்பமாக..
பள்ளி செல்லும் சிறுவன் ஒருவனுக்கு அவனின் தந்தை கூறிய அறிவுரை (ஒரு கற்பனை உரையாடல்)

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (26-Dec-15, 3:58 pm)
சேர்த்தது : ஹஸீனா பேகம்
பார்வை : 140

மேலே