உம் மோடித்தனத்தை எங்கிட்டக் காட்டாதடி

உம் மோடித்தனத்தை எங்கிட்டக் காட்டாதடி.
==========================================

உங்களோட இந்தப் பத்து வருஷமா வாழ்ந்து நா என்ன சொகத்தக் கண்டென். எங்க அம்மா வீட்டுக்கே போறென். இனிமெ அங்க நீங்க வந்து கெஞ்சிக் கூத்தாடினாலும் நாங் கண்டிப்பா திரும்பி வரமாட்டென்.
==
போடி, போ…போ. உன்னொட மோடித்தனத்தையெல்லாம் எங்கிட்டக் காட்டாதே. என்ன விட்டுட்டு உன்னால நாலு நாளைக்குக் கூட உங்கம்மா வீட்ல இருக்கமுடியாது போடி. திரும்பித்தானே வரபோற. வா அப்பறம் உன்ன கவனிச்சிக்கிறென்.
=============================================================================
மோடி = 1. வேடிக்கை An exhibition; a show
2. மேட்டிமை Haughtiness’ austerity
3. A kind of craft or enchantment
4. பிணக்கு A love-quarrel [ஊடல்]
5. A forest goddess
ஆதாரம்: Winslow’s A Comprehensive Tamil and English Dictionary. Asian Educational
Service. New Delhi: 1992. First Published in 1862. பக்கம்: 902
==========================================
மோடி என்ற சொல் தமிழ் மொழியிலும் உள்ளது என்பதற்கான சான்றே நீங்கள் மேலே கண்டது. பொதுவாக கல்வியறிவுள்ள தமிழர்களில் சுமாராக 95% மேல் தங்கள் பெயர்களுடன் தங்கள் சாதிப் பெயர்களை ஒட்டிக்கொள்வதில்லை. ஆனால் தமிழகம் புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் அவரவர் தம் பெயருடன் சாதியின் பெயரை அல்லது குடும்பப் பெயரையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் நிலையில் நிற்கும் கேரளமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த மாநிலங்களில் நாட்டின் முதல் குடிமகனில் இருந்து கல்வியறிவற்ற பாமரர்கள் வரை, அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், சமயத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், மெத்தக் கற்ற மேதைகள், எழுத்தாளர், பாரத் ரத்னா விருது பெற்றவர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பெரும்பாலோர் தங்கள் சாதிப் பெயரையோ அல்லது குடும்பப் பெயரையோ தங்கள் பெயர்களுடன் இணைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது அவர்களைப் பார்த்து படித்த தமிழர்கள் சிலரும் தங்கள் சாதிப் பெயர்களை அவர்கள் பெயர்களோடு ஒட்டும் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரை குடும்பப் பெயர்கள் இல்லை. ஆந்திராவில் ‘ராவ்’ என்ற சொல்லை பிராமணர்கள் மட்டுமே தங்கள்: பெயருடன் இணைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது விளிம்புநிலை மக்கள் கூட தங்கள் பெயருடன் ‘ராவ்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
==============
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (26-Dec-15, 8:05 pm)
பார்வை : 80

மேலே