இந்த அனாதையின் அபலை நீ
பிரியமே...
பிணைவதும்
இணைவதும்
குளிருக்கா?
குழைவதற்கா?
சகியே...
சலித்து
சிலிர்த்தே
தகிக்கிறாய்!
கருப்பியே....
கோபத்தில்
சிவப்புமாகி
பிடித்துப் போகிறாய்!
உயிரே....
உணர்வு வெள்ளம்
மூழ்கடித்து விட்டதால்
உள்ளமுகவரி தொலைந்து போனதே!
அதனால்
அனாதையாய் நான்,
எனக்கு
அபலையாய் நீ!