குரங்கு சமூக பார்வை

இங்க பாரு அங்க பாரு
புளிய மரத்துல காக்கா பாரு.
மாங்கா மரத்துல பூரான் பாரு
இதப் பாரு அதப் பாரு.
சின்ன பயலே சின்ன பயலே
ரோட்டுல குழிய பாரு
நாட்டுல ஊழல்ல பாரு.
எல்லாத்தையும் பாரு.
இந்த ஜனநாயகத்தை காப்பாத்துவது யாரு..
யாரு.. யாருன்னு நீ கேளு
கேளு... கேளு அடித்து அடித்து
நீ தட்டி கேளு.
நீதியைக் கேளு. நியாத்தைக் கேளு
தர்மத்தை நிமிர்த்து. அதர்மத்தை அடக்கு
வன்மத்தை ஒதுக்கு. நல்வளத்தை பெருக்கு.

நாளைய மன்னவன் நீயடா
இன்றைய மாணவன் நீயடா
அதிகார ஆணவத்தை ஒழிக்க
நல் அதிகாரத்திற்கு நீ வரணுமுடா
என் சேரிக்கார பாசக்கார புள்ளயே.!
நாளைய ஆட்சி அதிகாரத்துல நீ
இருந்திட வேணுமடா

@@@@@@


குரங்குக் குட்டி. சமூகக்கவிதை.

எழுதியவர் : குரங்குக் குட்டி (27-Dec-15, 1:12 pm)
சேர்த்தது : குரங்கு குட்டி
பார்வை : 82

மேலே