காதலின் வலி
பார்த்தேன் அது கவிதை அல்ல
தாம் கடந்து வந்த தடத்தினை.......
படித்தேன் அது வரிகள் அல்ல
யாரோ வாரிகொடுத்த வலிகள்தனை........
இவன் முகம் அறியா உந்தன்
தேகம் கொண்ட தீயினில் தமக்கு
இந்நிலை அளித்த அந்த
காலனும் கருகிப் போவானோ......
மோகம் கொள்ளும் பருவம்தனில்
அவனை பார்த்த உடனே பரிபோனதே
உந்தன் உள்ளம் அதற்க்கான சாபம்
அளித்த சத்திரியன் எவனோ......
ஈன்றவன் திரும்பிப் பார்க்க
சிந்தித்தும் திரும்பாமலே போன
அந்தக் கணம் மறந்து போனாலும்......
எவன் கொடுத்த பாரமது
இதயம் கனமாகவே இன்னும்
அகம்தனில் கனக்கிறது நினைவுகள்.......
ஈன்றவள் எத்திசை சென்றும்
இதயம் நிலை கொள்ளா
ஏக்கத்தினை இடைமறித்து
வாழ்வுதனில் மறைத்தவளே.....
எவன் கொடுத்த ஏமாற்றம்
இன்று சுட்டெரிக்குது உந்தன்
பருவச் சுவடுகளை........
நேசம் ஒன்றே நிம்மதியென
நித்தம் நித்தம் மறவாது
நேசித்ததற்கு ஒரு சாபமா......
அகிலத்தில் பாசம் ஒன்றே
பக்தி என்று பாசம் வைத்ததற்கு
வாழ்வுதனில் ஒரு பாவமா........
நீ உண்மை உண்மையென
பொய்யான எவரிடத்தில் உன்
காதல் மெய்ப்பட எண்ணியது
காதலெனும் கீதைதனில் தாம்கண்ட
இயலாத்தன்மையே காதலின் இலக்கணமோ.....
-தஞ்சை குணா