ரெப் டாக்டர்

ஒரு ரெப் டாக்டர் ஒருத்தர ஆறேழு மாசமா பார்த்துட்டு இருந்தாரு...

டாக்டர் பொண்ணு ரெப்போட சின்சியாரிட்டிய பார்த்து ரெப்ப லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா.
இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு.,
டாக்டர் "எம்பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன் ஆனால் ஒரு ரெப்புக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு" சொல்லிட்டாரு..

டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை யார் கல்யாணம் பண்ணாலும் ஒரே மாசத்துல செத்துடுவாங்க..

டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாரு..
அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்..
அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார். அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்.
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார், அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...

என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி ஆகிடுச்சே.. சரி அந்த ரெப்புக்கே மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு முடிவு பண்ணி..

ரெப்புகிட்ட வந்து கால்ல விழுந்து கெஞ்சி ( நடக்குமா ) மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு... எல்லோரும் அந்த ரெப் செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...

ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு, ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அந்த ரெப் சாகலை... எல்லோருக்கும் ஆச்சரியம்...

செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க... அந்த பொண்ணு ஜாதகபடி அவள கட்டிகிட்டவன் ஒரே மாசத்துல செத்துருவான்னு இருக்கு... அதனாலதான் நாங்க இங்க இருக்கோம்..

ஆனால் அந்த ரெப்புக்கு ஒன்னும் ஆகலையே எப்படி?..

அதற்கு எமன் சொல்றாரு,
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல வெயிட் பண்ணிட்டு இருப்பேன்,
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு வந்துடுவேன்..
அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரை பிடிச்சிடுவேன்,

ஆனால் இந்த ரெப் இருக்காரே ( எமனே அழறாரு).. அவரோட டூர் ப்ரோக்ராம்ல நாமக்கல்னு போட்டிருந்தாரு அதை நம்பி நான் நாமக்கல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா அவரு மேட்டூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்காரு... சரி அடுத்த நாள் ஆத்தூர்னு போட்டிருந்தாப்ல நான் ஆத்தூர்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ஆனா சேலத்துல வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல..

டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த எமனுக்கே எட்டு போட்டு காட்றான்யா இந்த ரெப்புனு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு..

எமனை மட்டுமில்லை., எவனையும் சமாளிப்பான் இந்த Rep.. Rep super la..!!!

ஜோக்: Salem S N Arul

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (27-Dec-15, 7:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 65

மேலே