இன்று புதிதாய் பிறந்தோம்

விடியல் வந்தது
விளக்கொளி மறைந்தது!

விளக்கு வெளிச்சத்திற்கு விடை கொடுத்து
விடியலை நோக்கி விரைந்திடுவோம் !

பூவாய் மலர்ந்திடு !
புன்னகை பூத்திடு !
கனவுகள் களைந்திடு !
காரியம் செய்திடு !

அன்பை வளர்த்திடு !
ஆணவம் அகற்றிடு !
மாசு களைந்திடு !
மாற்றத்தை தந்திடு !

சரித்திரம் படைத்திடு !
சாதனை செய்திடு!
புத்துயிர் பெற்றிடு!
புண்ணியம் செய்திடு!

புதிதாய் பிறந்தோம்
புன்னகை பூப்போம்!
பட்டாம் பூச்சாய்
பறந்து திரிவோம்!

எழுதியவர் : hajamohinudeen (28-Dec-15, 12:24 pm)
பார்வை : 409

மேலே