நானும் நீயும்

நானோர் நதி
நீயென் பூமி
உனையன்றி எனை ஏந்த
யாருண்டு ?

நானோர் தூசி
நீயென் வெளி
நீயின்றேல்
எனக்கேது இருப்பு ?

நானோர் நிகழ்வு
நீயந்தக் காலம்
நீதானே
எனை நானாக்குகிறாய்.

நானோர் வார்த்தை
நீயென் மொழி
உன் உயிர் மெய் தானே
என் உயிர்மை

நானோர் துளி
நீயென் விழி
உன்னால் தானே என்
கருவும் உருவும்

எழுதியவர் : (28-Dec-15, 1:17 pm)
Tanglish : naanum neeyum
பார்வை : 158

மேலே