எண்ணத்தில் துளிர்த்தவை -- 1
----------------------------------------------
என் நெஞ்சமோ பஞ்சுமெத்தை
தஞ்சம்கொள் நீ
பிரியாதிருக்க என்னுயிர்
உனை கடந்து ...
காற்றில் வேலி அமைத்தேன்
வேண்டாத கிருமிகள்
தீண்டாதிருக்க உன்னை ....
இன்றைய தலைப்பு செய்தி
கடல் நீர் வற்றியதாம் !
காணாததால் உன்னை
தேடிச் சென்றுள்ளதாம் ...
கடற்கரைக் காவலில் நான்
காதலில் தோற்பவர்
தற்கொலை தடுக்க ....
பெண்ணினம் காத்திட
மேடையில் முழக்கம் ,
முடிந்ததும்
விலைமகள் வீட்டு
மஞ்சத்தில் ....
உணவு விடுதியில் வேலை
அடுத்த வேளைக்கு
அரிசி இல்லை
அவன் வீட்டில் .....
லவ்பேர்ட்ஸ் இரண்டு
வாங்கினான் வளர்க்க ,
கூண்டுகளோ
தனித்தனியாய் ....
பழனி குமார்
28.12.2015