புத்தாண்டு வாழ்த்து கவிதை

முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்
வாழ்வின் அடிப்படை தத்துவம்;
நாம் கடந்து வந்த வாழ்க்கை புத்தகத்தில்,
வருடங்கள் மாதங்கள் வாரங்கள் நாட்கள் நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை புரட்டிப் பார்த்தால்,
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும் ஒரு நாள்தான் என்று ;
கடந்து வந்த பாதைகள் கடக்கவிருக்கும் பாதைகளில்
நமக்கு சந்திக்க போகும் அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;
திசை திரும்பிவிட்ட படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;
மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும் என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

எழுதியவர் : -நட்புடன் கவித்தோழன் (28-Dec-15, 4:56 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 8183

மேலே