இமைகளின் மடல்

எங்கும் உந்தன்
முகபிம்பங்கள்
முன் தோன்றி
மறைந்திடும் மாயங்கள்!

பறந்து போகும்
காகிதங்களும் உன்
முகம் சுமக்கும்
வண்ண ஓவியங்களாக
என் கண்களுக்கு மட்டும்!

என் முன் தோன்றிடாத
ஏமாற்றுக்காரி
விழிகளில் குவியம் குழியம்
இயல்பற்றதோ என்று
இமைகளும் தந்தி
வாசித்தே செல்கின்றது
வேல்விழியாள் பார்வைக்கு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-Dec-15, 8:31 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : imagalin madal
பார்வை : 57

மேலே