பித்து மனம்

எல்லாம் இன்பமயம் கண்ணே
உன் நினைவினில்
என் மனம் ஆடிட.

காணும் பொருளiல் எல்லாம்
உன் பிம்பம்
கண்ணில் தெரியுதே

எண்ணும் எண்ணம் தனிலே
உன் நினைவு
முத்தாய் எழுகிறதே

சித்தம் எல்லாம் இன்றும்
உன் எண்ணம்
மொத்தமாய் உள்ளதே

இன்ப எண்ணத்திலே
என் மூச்சு
இங்கு திணறகிறதே

திரும்பும் திக்கெல்லாம்
என் போக்கு
எல்லாம் மாறுகிறதே

உன்னால் பித்துக்கொண்ட
இந்த மனம்.


- செல்வா

எழுதியவர் : செல்வா (28-Dec-15, 9:12 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : paithu manam
பார்வை : 92

மேலே