வானம் பார்த்து

வானம் பார்த்து
கற்க வேண்டியது
பாரினில் பலவுண்டு...
நம் வாழ்விலும்
பலவுண்டு...
நண்பா வா!
நாமும்
அப்பலவற்றுள் சிலவற்றை
கற்க முயல்வோம்...!
எல்லையற்று
விரிந்திருக்கும்
விரிவானம் மனித
அறிவின்
ஆற்றலின்,புகழின்
எல்லையின்மையையும்...
தன்னை நம்பி
பலர் பிழைத்திருக்க
தான் யாரை நம்பியும்
வாழாத அதன் தன்மை
மனித தனி சுயத்தையும்
காட்டுகின்ற
என்னே
அற்புத காட்சி!...
கலைகின்ற இதன்
மேகங்களினூடே
கலைகிறது
எந்தன் மனது...!
பலவற்றை
பாரினுக்கு
புகட்டியுங்கூட
பாவனை செய்யாமல்
தொலைகிறது நெடிது...!
கருக்கொண்ட மேகம்
தற்சூழ கதிரவன்
ஒளியினில்
விளையாட்டு... ஈண்டும்
பணத்தின் போதையில்
செருக்குண்டு
செல்வம் குவிப்பவர்
நிலையையோ,உயர்வையோ
அடக்கியது
கையூட்டு!
மழைப்பொழிவது
ஒரு பொழுது
வறளுதல்
ஒரு பொழுதென
இதனமைப்பு
பலக்கூறுகளால் ஆனது...!
நடைமுறையில்
நம் வாழ்வும்
பசிப்பது ஒரு பொழுது...
புசிப்பது ஒரு
பொழுது... ரசிப்பது ஒரு
பொழுது... ருசிப்பது
ஒரு பொழுது...
விதைப்பது ஒரு
பொழுது... அறுப்பது
ஒரு பொழுதென
பலக்கூறுகளாளானது...!
தவறவிட்டால்
இதன் பயனை
மழையாய்...
வெயிலாய்...
மீண்டும் பெறுவதிங்கு
அரிது... நம்மிலும் பலர்
பலப்பொழுதை
வீணாய் கழித்துவிட்டு
திண்டாடுகிறார் ஈண்டு
நெடிது...!
காலமும்,
வயதும் தாக்கவொண்ணா
வெண்கொற்ற
குடையிது...!
வேதங்களிலும்
உயரியது
இதன்
உள் ஞானம்...!
இதன்
ஆதரவினூடே
இயங்குகிறது
இம் மாஞாலம்!!!
**********************

எழுதியவர் : Daniel Naveenraj (31-Dec-15, 9:28 am)
Tanglish : vaanam paarthu
பார்வை : 106

மேலே