தேர்வு - தேர்ச்சி - அச்சம்
தேர்வை எதிர்நோக்கும் அந்த நொடிகள்..
நாளை தேர்வு..முதல் நாள் இரவு;
கண்களில் ஏது உறக்கம்?
படித்தது மறந்து,
படிக்கவும் மறந்து..
தேர்வை எண்ணி..
நெஞ்சினுள்ளே அலறல்!
முக்கிய வினாக்கள் வந்திடுமோ?
படிக்காமல் போனது வந்திடுமோ?
படித்தது மறந்து போய்விடுமோ!!!
நாளை காலை என்செய்வேன்!?
ஆயிரம் கேள்விகள் எழுதே மனதில்!!
அச்சம் என்னை ஆட்டிப்படைக்க..
நானே தைரியம் சொல்லிக்கொண்டேன்,
"தோல்வியுற்றால் பாவம் இல்லை!
மீண்டும் எழுதி வென்றிடலாம்!"
அத்தனை தெய்வமும் கண்முன்னே..
காலடி தொழுது வழிபட்டேன்!!
படித்தது வந்திட வழி செய்வாய்!
தேர்ச்சிப் பெற்றிட துணை செய்வாய்!!
முன்பே படிக்க தவறியதால்..
அழுது தவிக்கிறேன் இப்பொழுது!
100க்கு 100 கேட்கவில்லை,
கேட்கவும் எனக்கு ஆசை இல்லை!
நேரம் போவது தெரியாமல்..
புரட்டி, புரட்டி ... புத்தகம் கிழித்தேன்!
மறுநாள் காலை தேர்வு..
உறக்கமற்ற இரவு!
வாழ்த்தி அனுப்புங்கள்..
நான் தேர்ச்சி பெற!