விடைபெறும் 2015

விடை கொடுங்கள்..
இன்னும்.. கொஞ்சம்
மணித்துளிகளில்
கரைந்து விட போகிறேன்..!!

திரும்பி வராத தூரம்
பயணம் எனக்கு..!!உங்கள்
ஓராண்டு விருந்தாளி நான்
எனக்கு முன்னே வந்திருந்து
என்னுடனே திரும்பி செல்ல
ஒரு சில விருந்தாளிகள்
டயரி, கலண்டர் வடிவில்..!!

என்னை வரவேற்ற நாள் நினைவிருக்கின்றதா??
என்ன மக்களே!!
திரும்பி பார்க்க மறுக்கிறீர்
எனக்கு விடை கொடுங்கள்.
!!

எழுதியவர் : இவள் நிலா (31-Dec-15, 11:33 pm)
பார்வை : 131

மேலே