வருவாய் ஆண்டே 16

பதினாறு தரவருகுது பதினாறு
படிதொறும் வரம்கொண்டு பலநூறு
சதிராடி வருபவளை வருமாறு
சனத்தோடு வரவேற்க சபையேறு

பத்தோடு இணைந்திட்ட ஓராறு
பலனள்ளித் தரவந்த பாலாறு
சித்துள்ளே சிரித்தவண்ண முகமாறு
சேவித்தேன் அருளள்ளித் தருமாறு

நூறாண்டு தாண்டிவந்த வரலாறு
நுழைந்திங்கே களைப்பாற இளைப்பாறு
வேறான மனமாக்கு ஒருகூறு
விடுக்கின்றேன் விண்ணப்பம் இவ்வாறு

இளமைக்குப் பேரான பதினாறு
இனிஎமது ஆண்டாகும் நலம்கூறு
வளமைக்கும் நாலொடு ஈராறு
வரவேற்கும் வரிகளிது பதினாறு

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Jan-16, 6:09 am)
பார்வை : 1462

மேலே