மாமல்லன் சிற்பமே

விடியல் உயிர்த்தெழுந்து
வெள்ளி குடமெடுத்து
தண்ணீரெடுக்க நீ
நதிக்கரைக்கு வருகையிலே
உன்பார்வை பட்டுவிட்ட
அருகம்புல் பனித்துளியும்
குளிர்ந்து இறுகி
வைரமாய் மாறிவிட
உன்தேகம் தொட்டுவிட்ட
இளம் காலை தென்றல் மட்டும்
செடி கொடி மலரிடத்தில்
தன் அதிர்ஷ்டம் என்று சொல்லிவர
பன்னீர் புஷ்பமெல்லாம்
உன் ஸ்பரிசம் தொட்டுவிட
பின் பனி நீரெடுத்து
கனிவோடு காத்திருக்க
நீ நடந்து வரும் பொழுது
மயங்கிய மனமெல்லாம்
தன் உடல் மறந்து
உன்னழகை சூழ்ந்துவர
உன் நடைஉடை கண்ட
மான் கூட்டம் மயில் கூட்டம்
ஓடோடி சென்று
பொதுக்குழுவை கூட்டிவிட
செண்பக தோட்டத்து
செந்தாழம் பூவெல்லாம்
உன்மனம் தொட்டு மணம் வீச
நெடு நேரம் பார்த்திருக்க
தெளிந்த நீர் நதியோ
உன் நளினம் கண்டுவிட்டு
ஓட்டத்தை நிறுத்தி
நயனத்தொடு வெட்கப்பட
உன் வதனத்தை கண்டுவிட்ட
ஒற்றைக்கால் கொக்கு மட்டும்
இரு கயலை விட்டுவிட்டோம்
என வருந்தி நின்றிருக்க
என் அருகே முன்வந்து
முகம் சிவந்து நாணி நின்ற
மாமல்லன் வடித்து வைத்த
சிருங்கார சிற்பமே
உன் கண்ணொளி கண்டு
காதொலியை மறந்துவிட்டு
உருகி கரைகிறேன்
மெழுகு சிலையாக..