கோரிக்கை
என் இனிய தோழி
வாசல் தாண்டி
இன்றுநீ
வந்திருக்க வேண்டாம்
விலக்காத பனிமூட்டம்
தாண்டி
உனக்காக எழுதி வைத்த
கவிதைகள் ஏராளம்
எதுவும் நூலாகாமல் ..
ஏதோ ஓர் பூர்வ
ஜென்மத் தொடர்பு
நம்மிருவரிடை ...
உன்னை நானும்
என்னை நீயும்
இப்படி சந்திக்க
வைத்தது..
எனக்கான பொறுப்புக்களும்
உனக்கான பணிகளும்
நடந்து செல்லட்டும்
நம்முன்னே
நமக்காக காத்திருக்கும்
காலத் தெருவில் ...
கௌரவ ஆடைகளில்
கிழிசல்கள்வேண்டாம்
அதனால் நேற்று
வரைசேர்த்து
வைத்த நிறைவேறாப்
பிரமைகளைக்
காற்றில் கலைத்து
விடு
நட்புக் கரம் சேர
நான் எழுதும்
புதுக்கவிதை.
என்னைப் புரிந்துகொள்
உன் வெற்றி ஒன்றே
போதும் எனக்கு ..
என்னில் தவறு
கண்டால்
மன்னித்துவிடு
தயக்கமின்ன்றிப்
பேசவிடு.
இனியும் வேண்டாம்
எமக்குள் இந்தக்
கண்ணாமூச்சி
ஆட்டம் ..