இப்படிக்கு ஏழை

இப்படிக்கு ஏழை இல்லை
எனும் சொல்லின்
பிறப்பிடம் நான் .

பசி மட்டும்
துணையாய் கொண்ட
அனாதை ...!


எதிரியென்று
எவருமில்லை
பசியைத் தவிர .

உண்மையை
உரக்கச் சொல்வேன்
உண்டு நாட்கள் பல ஆனதென...!

வாசல்கள்
பல கண்டவன்
ஒரு பிடிச் சோற்றுக்காக .


கொடுஞ்சொல்
கொச்சை மொழியும்
தினம் கேட்டிடும் சங்கீதம்...!

கர்வம் தகர்ந்து
ஆண்டுகள் சென்றது.

முதுமையில்
இயலாமை மரணத்திற்கு நிகர்...!


கடந்தவை
எண்ணிக் கரைந்திட
கண்ணீர் இல்லை மிச்சம்.

தொன்னையோடு
திண்ணைத்தேடி  அழைகிறேன் 
ஒரு அன்னை
கொடுத்த வெண்ணெய்ச்
சோறு தின்ன ...!


பழையதும்
புதியதாய் தோன்றுவது
எனக்கு மட்டும் தான்.

புன்னகை
உதிர்த்து நகர்கிறேன்
குழந்தையற்ற கிழவனைக் காட்டி
குழந்தைக்கு அமுதூட்டிடும் அன்னையிடம்...!


உறவு சொல்லி
பிறர் அழைத்திட ஆசை
கிழவா,
பிச்சைகாரா - இவையே
என் உறவு மொழிகள்...!

நாய்களும் நகைத்திடும்
அவைதம் உணவில்
பங்கு கொள்வதால்.

என் தினச் சாதனை
குப்பைத் தொட்டி சண்டைக்கு பின்
கிடைத்திடும்
சிறு உணவு மட்டும்...!


கவுரவம்
நான் காக்கத் தவறிய செல்வம் ,
செல்வம்
எட்டி நின்று நகைத்திடும் எதிரி.

கவலைகள்
மறந்திட வேண்டுகிறேன்
பசியோடு சேர்த்து...!

நடை தளர்ந்தன
முதுமையோடு இயலாமை,
பசியும் சேர்வதால்.

ஆதலால்
மரணம் வேண்டும்
ஈமச் சடங்கின் பணம்  சேர்த்த  பின்...!


*இப்படிக்கு ஏழை .!*

எழுதியவர் : Rizzy (1-Jan-16, 8:11 pm)
Tanglish : ipadikku aezhai
பார்வை : 77

மேலே