உலகம் உன்னை போற்றும் நாளை 555

உலகம் உன்னை போற்றும் நாளை 555

தோழியே...

பூக்களை உன் கூந்தலில்
சூடுவதை காட்டிலும்...

அதன் வாசத்தைபோல்
எங்கும் வாசமாய் இரு...

தங்க வளையலுக்காய்
நீ போராடியது போதும்...

உன் புன்னகையால்
ஒரு பொன்னுலகை உருவாக்கு...

வழியின்றி போனவர்களுக்காக
நீ உதவி கரம் நீட்டு...

நீ காவியமாய் படைக்கபடுவதைவிட
கருணையால் கம்பீரம்கொள்...

உன்னால் முடிந்தவரை
உதவி கரம் நீட்டு...

பணத்திற்காக ஓடும்
கூட்டத்தில் நீயும் ஓடு...

உன்னால் முடிந்தவரை
பொதுநலமும் தேடு...

நாளைய உலகம் அழியும் வரை
உன்னை போற்றும்...

என் தோழியே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jan-16, 8:34 pm)
பார்வை : 462

மேலே