நினைவு
காலமெல்லாம் என்னுடன் நீ
என்ற நினைவினில் நான்
காணும் கற்பனைகள் ஆயிரம்
கவிதையாய் வடிந்தன தினம்
உன் நினைவுப் பூங்காவில்
என் உலா எண்ணிகையில்
பூத்தனப் பூக்கள் நெஞ்சில்
மாலையாய் தொடுத்தனக் கவிதையில்
மனம் உன்னை நினைக்கையில்
உள்ளத்தில் நினைவு ஊற்று
என்னுள் உன்னை யெற்றி
அது தரும் ஆயிரம் பாட்டு.
- செல்வா