கவிதை எனக்கு ஓர் உன்மத்த காமம்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விடயத்தில் புளகாங்கிதம் கிடைக்கிறது
ஆதி மனிதனுக்கு முதல் புளகாங்கிதம் உணவு உண்பதாக என்று தொடங்கி இன்னோரு உடலின் வெப்பமும் ஸ்பரிசமும் பின் போதமும் , ஒலியும் , தேவைப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைய மனிதனுக்கான அகமும் புறமும் மிகுந்த இரைச்சலாகியிருப்பதன் பொருட்டு உளவியல் ரீதியாகவும் சில வித்தியாசமான உணர்வுகளில் புளகாங்கிதத்தையும் புனிதத்தையும் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
குறிப்பாக இயல் இசை நாடக கலைஞர்கள் அதன் அபிமான ரசனைக்காரர்களும் இவர்களை நீங்கள் அடர்வனத்தின் தனிமையில் விட்டால் மீண்டும் விடுவார்கள் புதைந்தும் போவார்கள் அவர்களின் புளகாங்கித உணர்வால் சமீபத்தில் நேசனல் ஜ்யோக்ரபியில் இந்த மாதிரி மனிதர்களை பற்றி காண்பித்தார்கள்.
அதில் பலூன் காதலர்களையும் காண்பித்தார்கள் அதில் ஒரு ஆணின் பலூன் மீதான காதல் என் மனதை என்னவோ செய்துவிட்டது அந்த பலூனை தன் டீசர்ட்டில் உள் நுழைத்து அந்த பலூனோடு காதல் மொழிகளும் முத்தங்களுமா வாழ்கிறார் அந்த பலூன் உடைந்தவுடன் கதறி அழுதபடி கிழிந்து நைந்து போன அந்த பலூனுக்கு நீவி விட்டும் கொஞ்சியும் கேவி அழுகிறார்.
என் மனம் ஒருவித வலியை உணர்ந்தது எனக்கும் கூட கவிதையின் வாசித்தலின் மீதும் இதே போல்தான் கவிதையெழுதுவதில் நானும் புளகாங்கிதம் அடைந்து கொள்கிறேன் கவிதை எனக்கு ஓர் உன்மத்த காமம்.