எனக்குள் உன்னுயிர்

கடவுளுக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது..
மனதின் மன்னவனாய் மாமன்
நீ முடிசூடி விட்டாய்..
மக்கள் மனமறியா கோ போல
என் மனம் புரியாமல் நீ..

மழையின் சாரல் நீ..
ஓடையின் சலசலப்பு நீ..
காலையில் வெண்பனி நீ..
காதலில் ஒற்றை ரோஜா நீ..
இப்போதாவது புரிகிறதா..
நான் விரும்பியவையும் விரும்புகின்றவையும்..

என் ராசிபலன் நோக்க தினம்
உன் முகம் தான் பார்த்துகொள்கிறேன்..
உனக்கு இன்பம் என்றால்
எனக்கு மகிழ்ச்சி..
உனக்கு வருத்தம் என்றால்
எனக்கு ஏமாற்றம்..

காலைப்பொழுதில் என் காய்ச்சலையும்
மாலைப்பொழுதில் என் நாணத்தையும்
கதிரவன் ஒளிவழி
வானில் காட்டிக்கொடுக்கிறாய்..
காரணகர்த்தா நீ மட்டும்
என் மனதினில் மறைந்துகொண்டு..

என் காதல் கவிதையில் மட்டும்
எழுத்துக்கள்
எழுதப்படுவதில்லை
கோர்க்கப்படுகிறது..
நம் காதலுக்கு மாலையாக வேண்டுமே..

அன்பே..
விதை அறியாத அதற்குள் இருக்கும் உயிர்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
நான் எனக்குள் உணர்கிறேன்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (3-Jan-16, 7:05 pm)
பார்வை : 201

மேலே