அழகோ அழகு

அழகோ…அழகு
உறுமி திரியும் வேங்கை அழகு!
-----வேட்டையில் அதனின் வேகம் அழகு!
கர்ஐனைக் காட்டும் சிங்கம் அழகு!
---- காட்டின் ஆளுகை அதனின் அழகு!
மெல்ல அசையும் யானையும் அழகு
---- வெண்மை நிறத்தில் தந்தமோ அழகு!
கூடிக்கரையும் காக்கைகள் அழகு!
---- கூடும்உறவின் கொள்கையும் அழகு!

கூட்டமாய் தாவும் குரங்குகள் அழகு!
---கொட்ட மடிக்கும் செயலும் அழகு
வெள்ளி நிறத்தில் நிலவும் அழகு
----வெம்மைத் தணிக்கும் குளிர்வும் அழகு
துள்ளி வீழுந்திடும் அருவிகள் அழகு
---தென்றல் தரும் சாரலும் அழகு
அள்ளி வழங்கும் இயற்கை அழகு
--- அதுதான் நமக்கு இன்பம் அழகு

---கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (3-Jan-16, 8:05 pm)
Tanglish : alago alagu
பார்வை : 221

மேலே