புள்ளி
நான் சிறு புள்ளி தான்.... ஆயினும்
பெரும் புள்ளியாவேன் ....உங்களின்
பொறுமையான முயற்சியால் ...
புள்ளி வைத்தால்
இலக்காவேன்
முற்று புள்ளி வைத்தால்
முடக்கம் அடைவேன் !!!
புள்ளி என
உதாசீனம் வேண்டாம்
பல புள்ளிகளின் சங்கமத்தால்
சித்திரம் படைப்பேன்!!
எதற்கும்
துவக்கம் நானே !
எல்லாவற்றிற்கும்
முடிவும் நானே !!
நான் சிறிதாய் வளைக்கப்பட்டால்
தொடருவேன்
பெரியதாய் வளைக்கப்பட்டால்
கேள்வி குறி ஆகி விடுவேன் ....
முறையாய்
இணைக்கப்பட்டால்
கோலமாய் திகழ்வேன்
முறைகேடானால்
அலங்கோலமாக்கி விடுவேன் !
என்னை முற்றுப்புள்ளியாய்
பயன் படுத்துங்கள்
தேவையற்ற சொற்களுக்கு
சீரிய சினத்திற்கு
நலமற்ற சுய நலத்திற்கு ...
இலக்கை நோக்கி
புள்ளி வைத்து
புள்ளியில்
பயணித்து
புள்ளியால் புள்ளிக்கு
பெருமை சேர்ப்போம் ...