என் தோழன்

பொய்யில்லை..
போலியில்லை..
தேவைக்கேற்ப பழகவில்லை!

முகத்தளவில் புகழ்பாடி...
வஞ்சம் பேசி வதைக்கவில்லை!

செய்த நன்றி மறக்கவில்லை..
உறவாடி கெடுக்கவில்லை!

உற்ற நடப்பைக் கொல்லவில்லை..
உயர்வு தாழ்வு பார்த்ததில்லை!

வசதி கண்டு பழகவில்லை..
வசனம் பேசி மயக்கவில்லை!

வலி இல்லை;
வாதம் இல்லை!
வேதனைகள் ஏதுமில்லை!

நட்ப்பைக்கூட..
தேவைக்கேற்ப தேர்வு செய்யும்..
இழிவு கண்டு வருத்தமில்லை!!

எனக்கென யாருமில்லை..
துயர் ஒன்றும் கண்டதில்லை!

காரணம்...
எனக்கு நானே தோழன்!!

எழுதியவர் : நேதாஜி (3-Jan-16, 9:53 pm)
Tanglish : en thozhan
பார்வை : 399

மேலே