எரியாத வெறவு - காதலாரா

எரியாத வெறவு - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~
சட்டிக் கழுவுற
கல்லுல ஏறி
கட்டிக்க வந்தா ...
சாம்பல மூஞ்சில அப்பி
முட்டிட்டு நிப்ப...
திண்ணைய புடிச்சி
திரும்பாம நின்னா..
பூனைய முடுக்கி
பொடவயில தூக்குவ..
கைய நசுக்குன
கதவக் கழட்டி...
செவுத்துல சாத்தி
பளார்னு அறைவ...கதவ..
பாட்டி வெத்தல
வாய் பூராக் கசக்கும்னு
ஒடைஞ்ச சங்கடைல
வெறும் பால ஊட்டுவ ..
சாக்குப் பையில
சன்னல சாத்தி
பொத்தத் துணிய
மெத்தயா விரிப்ப..
நடு ஜாமத்துல
வரிக்கி ஊட்டி
வாயத் தொடப்ப ...
காலங்காத்தால
கத்தி தொலயாதனு
வர டீ .....வைக்க
வெறவ தொலவுவ..
கூர நனைஞ்ச நாள்ல
வூட்டு சோகய உருவி
அடுப்புல எரிச்ச ..
ம்ம்மா ....
வூட்ல வெறவில்லனா...
வூட்டையே வெறவாக்குற...
வூட்ட எரிச்சி முடிச்சா
எந்த வவுறு பசிக்கும்.
- காதலாரா