உன்னத கலாச்சாரங்கள்-1
கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட ஃபிரெஞ்சு நாகரீகம்-1
பழமை வாய்ந்த சரித்திர பாரம்பரியம் மற்றும் தற்கால நவநாகரிகத்தின் பேரு வளர்ச்சி எனக் காலங்களைக் கடந்து நிர்க்கும் கலாசார பின்னணியைக் கொண்ட தேசம், பிரான்ஸ். மாவீரன் நெப்போலியன் போன்ற பெரும் தலைவர்கள் உருவான பிரெஞ்சு மண்ணில், சிந்தனையாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள் போன்ற பலரும் தோன்றி, இந் நாட்டுக்கு உலகின் கலாசார மையம் என்ற பெயரை ஈட்டித் தந்துள்ளனர். இதுபோன்ற கலாசார பெருமை மிக்க நாட்டின் சிறப்பு மிக்க தலைநகராக விளங்குவது பாரிஸ் மாநகரம். தெருவிளக்குகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதால், இது “விளக்கு நகரம்” என்று உலகம் முழுவதும் புகழப்படுகிறது.
ஈஃபில் கோபுரம் :
ஒரு நூற்றாண்டு காலம் உலகத்தின் மிக உயர்ந்த கோபுரம் என்ற புழுடன் விளங்கிய ஈஃபில் கோபுரம், இன்றும் தான் கொண்டையை மேகங்களினிடையே புதைத்து, முன்னூறு மீட்டர் உயரத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. நகரத்தின் எந்த கோடியிலிருந்தும் இந்த கோபுரத்தின் சிகரத்தைக் காண முடியும்.
இது கட்டப்பட்ட கதை வினோதமானது. ஆயிரத்து எண்ணூறு என்பத்தொன்பதாம் ஆண்டு பாரிஸில் நடந்த அகில உலக கண்காட்சியின் ஒரு பகுதியாக, தற்காலிகமாக கட்டப்பட்ட இந்த கோபுரம், மக்களின் விருப்பத்தால் இடிக்கப்படாமல் நிண்ட்ரூ விட்டது. இன்றோ பாரிஸ் நகரத்துக்கு மட்டுமில்லாமல், ஐரோப்பா கண்டத்துக்கே ஓர் அடையாளச்சின்னமாக விளங்குகிறது. ஈஃபில் கோபுரத்தை கட்டியவர் “கஸ்டோவ் ஈஃபில்” என்ற புகழ் பெற்ற பொறியாளர். இதைக் கட்டி முடிக்க பன்னிரெண்டாயிரம் இரும்புத் துண்டுகளும், எழுபது இலட்சம் ஆணிகளும், இரண்டு ஆண்டுகளும் தேவைப்பட்டன.
லுவர் :
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியங்களில் ஒன்றான லுவர், பாரிஸில் காணவேண்டிய இடங்களில் முதன்மையானது. ஃபிரெஞ்சு மற்றும் இத்தாலிய பாணியில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அருங்காட்சியகத்தில் மூன்று இலச்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. லியர்நோடே டாவின்ஸி படைத்த உலகப்புகழ் பெற்ற ஓவியம் மோனோ லிசா, சிரிக்கும் மங்கை, இங்குதான் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.
நாட்ரே டேம் தேவாலயம் :
உலகப் புகழ் பெற்ற தேவாலயங்களில் ஒன்றான நாட்ரே டேம் தேவாலயம் பாரிஸ் நகரத்தின் நடுவில், தீவு ஒன்றில் கட்டப்பட்டுள்ளது. தேவாலயம் அமைந்துள்ள இடம், பண்டைய காலம் தொட்டே புனிதமானதாக கருதப்பட்டு வந்துள்ளது. ரோமானியர் இதே இடத்தில் தங்களது கடவுளான ஜுபிடருக்கு ஆலயம் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, பிரான்ஸில், பிற்காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்களுக்கு முன்னோடியாகும். நூற்று முப்பது அடி நீளமுள்ள தேவாலயத்துக்கு, அருபோத்தொன்பது அடி உயரத்தில் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் கண்ணாடி ஜன்னல்கள் தேவாலயத்தின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
புனித இருதய தேவாலயம் :
மாண்ட்மார்டிர் என்னும் உயரமான குன்றின் உச்சியில், ரோமானியா பாணியில் கட்டப்பட்ட தேவாலயம் இது. இதன் இருநூற்று எழுபத்திரண்டு அடி உயர கோபுரமும், மாதமும் வியப்பை ஏற்படுத்துபவை.
பாம்பிடு மையம் :
கண்ணாடியாலும், உலோகங்களாலும் கட்டப்பட்ட பாம்பிடு மையம் தற்காலக் கலைபொருட்களுக்கான தனி அருங்காட்சியகம். ஃபிரெஞ்சு அதிபர் ஜார்ஜ் பாம்பிடு அவர்களால் கட்டப்பட்டதால் அவர் பெயரால் விளங்குகிறது. இங்கு பிக்காஸோ போன்ற பிரபலமான பல இருபதாம் நூற்றாண்டு கலைஞர்களின் நாற்பத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. நாள்தோறும் இருபத்தைந்தாயிரம் கலைப்பிரியர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகிறார்கள்.
நன்றி : காஸ்யபன்