மார்கழிக் கோலம்
ஒரு நிமிடம் உரசிச் சென்றாயே எனைக் கடந்து,
உடன் உருகி உலர்கிறதே உள்ளம் கிடந்து,
கொஞ்சும் புன்னகையில்,
மூடி விட மறுக்கிறதென் விழி இமைகள்...
மார்கழிப் பனியில் பரிதவிக்குது என் உள்ளம்,
தாவனியில் நடுக்கத்திலும்
கவிதைகள் பல கூறுதடி உன் எட்டுப் புள்ளி கோலம்...!