புதிய ஆரம்பம் எங்கே

உங்க வீட்டுப் புதிய ஆரம்பம் எங்கே?

நீ என்ன கேக்கறன்னே புரியலையே?


அட உங்க பைய்யன் புதிய ஆரம்பத்தத் தாங் கேக்கறேன்.


நீ என்னப்பா என்னக் கொழப்பறே?


உங்க பையனத்தாங் கேக்கறென்?

எங்க பையனுக்கும் புதிய ஆரம்பத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?

இருக்குது. அதனால தாங் கேக்கறேன். உங்க பையம்பேரு நவீன் தானே?


ஆமாம்.

நவீன் -ன்னா புதிய, புதுமையான, புதிய ஆரம்பம்-ன்னு அர்த்தம்.

அடடா. இதுவரைக்கும் எனக்கு அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்ன்னே தெரியாதப்பா. அந்தப் பேருக்குத் தமிழ் அர்த்தம் தெரியாமலே சினிமா மோகத்திலெ அந்தப் பேர அவனுக்கு வச்சுட்டோம்பா.

------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.
-----------------------------------------------
நன்றி: விக்கிபீடியா:
Navin (also spelled Naveen, Hindi: नवीन, Urdu: نوین‎) is an Indian given name meaning new thing or new beginning or new start.

எழுதியவர் : மலர் (4-Jan-16, 8:45 pm)
பார்வை : 86

மேலே