என் காதலி நீ
நீ பறித்த சென்ற
பூச்செடியில்
காம்புகள்
கண்ணீ்ர் விடுகின்றன
உன் கூந்தல் சேர
கொடுத்து
வைக்கவில்லையே என்று
நீ எனக்குள்
அனுமதியின்றி
வந்த அழகி
நான் உனக்குள்
வர அனுமதி
கேட்கும் அகதி
மறைக்கபட்டு
மறுக்கபட்ட உண்மை
என் முன்ஜென்ம
முகவரியும் நீ தான் என்பது
உன்னை சந்தித்த
அந்த நாளை
கிழித்து விட்டு
வரலாறு என் வாழ்கையை
வாசித்து விட முடியாது
நீ பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உயிர்கிளையில்
சில இலைகள்
துளிர்கின்றன
என் காதலை ஏற்று
ஜென்மம் தீர்த்து வை
இல்லை கற்கள் சேர்த்து
கல்லறை செய்து வை