கனவுதனில் காதல் ---- வெண்கலிப்பா
நோய்க்கெல்லாம் மருந்தாக நொடிப்பொழுதும் கனவுதனில்
காய்க்கின்ற நினைவுகளில் கவிதையாகிக் கசிந்துருகிக்
கண்களிலும் பசலைநோயும் கவிமானே தவிர்த்திடுவும்
பண்ணதனில் வனைந்திடுவோம் பரவசமும் தழைத்திடவும்
நாணுகின்ற விழியாளை நலமாகக் கண்டலர்ந்தேன் .
பூணுகின்ற விரதத்தில் புவிமகளும் மகிழ்ந்திடுவாள் .
வாராயோ மதியெனவும் வளந்தன்னைத் தரவேண்டிச்
சீராக நிறைந்திடுவாய் சீர் .