சித்திரையும் மார்கழியில்

மார்கழி காலை
மயக்குது ஆளை
பனி மழையினிலே
நனைந்தேன் நான் இதமாக
நடந்தேன் மெல்ல சுகமாக
நரம்பெல்லாம் நடனம் பழகுதே..
சிந்தையும் தனிமையில் மூழ்கி
எதையோ சிந்திக்க
எந்தன் கண்களும் கால்களை பணித்தது
அவள் வீதி போகவே
அழகான கோலங்கள் எல்லாம்
அடக்கம் கொள்ளுது அவ்வீதியில்
அழகான கோலமென்று
அவளை பார்த்து ஏங்குது
ஏய் பனித்துளியே
கொஞ்சம் தள்ளித்தூரு
அவள் இட்ட கோலம்
இங்கு நனையுது பாரு
வாடை பனிக்குளிர் என்னை
வாட்டி எடுத்தது
அவளை பார்க்கும் வரை
அவளை பார்த்ததும்
வாடை பனிக்குளிரும்
நடுங்கி போனது
போர்வை தந்தேன் வள்ளல் போல
உண்மையில் எனக்கு வேர்த்தது.....
சித்திரையும் மார்கழியில் - இது
என்ன அதிசயம்.......