விழியில் கருமணியாய்
உன் விழியில் கருமணியாய்..,
சிக்கிக்கொண்டதே என் உயிர்...
என் மொழியில் ஒருதனியாய்..,
விக்கிக்கொண்டதே உன் பெயர்...
உன் பார்வை படும் நொடிகளில்...
எரிமலையாய் வெடித்து சிதறும் எண்ணங்களாலும்..,
பனிமலையாய் உருகியோடும் உணர்வுகளாலும்..,
என் குருதி நாளத்தில் வெள்ளப்பெருக்கு...
உன் அழகெல்லாம் என் கண்ணில் விழுந்து..,
என் கற்பனையை கட்டவிழ்ததே...
உன் பார்வையின் எல்லை.., இன்று
ஏனோ என்னை தொடவில்லை...
என் காதல் கட்டுரையின் முன்னுரையே..,
நீயின்றி,
பொருளுரை எழுதும்முன்னே..,
முடிவுரை எழுத தொடங்கிவிட்டேன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
