பித்தனாய்

பச்சை நிற உடையழகி
எலு(ழு)மிச்சை இடையழகி
பவளமேனி கொடியழகி
பசி தீட்டும் இதழழகி
பார்த்ததும் மிரளுதடி
பாவி நெஞ்சு
ஒற்றை கற்றை
கூந்தலோடு
ஒய்யார சிலையென
நின்றாய்
விசாலப் பார்வையில்
நீ வெளிக்காட்டும்
இமைகளில்
விலையேறிப் போகாதோ மையெல்லாம்
அது விளம்பரமென்று
விழுந்தேனடி
விதி பார்வையால் உன்
விழி கோர்வையில்
நீ நடந்தாலே
இசை சாத்தியம்
பின்பு ஏனடி
உன் கால்களில்
இசை வாத்தியம்
முன்னங்கால்
முந்தி வைக்க
பின்னங்கால்
பிதற்றுதடி
பிரபஞ்ச அழகியடா இவளென்று
இருந்தும்
ஏதோ ஒரு விசை
மூளைக்கு தந்தி
கொடுக்காமலே
மொத்த சரீரமும்
போதை எழுப்ப
மூச்சடைத்து
பினாத்துகிறேன்
முறைமாமன்
நானென்ற கர்வத்தில்
பித்தனாய்
இந்த பூமியில் !
-தஞ்சை சதீஷ்குமார்