பருவ விழியாளே

செந்தாமரை நெற்றியில்
செந்நெல் போல
பொட்டு வைத்த செந்தமிழ்க்காரியே

திட்டு திட்டாய்
தெளிக்க வைத்த இரசாயனத்தை
மொத்தமாக நிரப்பிவிட்டான்
உன் கவர்ந்த
விழிகளைக் கண்டு பிரம்மனவன்

மின்கம்பி
தெடர்பில்லா
தொடர் மின்சாரத்தை
தொலை இயக்கி
கருவி(ழி)யைக் கொண்டு
புகுத்திவிட்டாய்
இதயத்தில்

உன்
கலைந்த முடி
கதை சொல்லுதடி கல்வெட்டுகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்
மொழிப்பெயர்த்து
காற்றின் உதவியோடு

முக்கனிகளின்
பெயர்களை மாற்றச் சொல்லிவிட்டேன்
எல்லாமே
நீயென்பதாலே

இரு புருவ நாற்றுகளும்
ஒன்றுகூடி
விளைவித்த
வைர நெல்மணியோ
உன் நெற்றிப் பொட்டு

விடை கூறடி
பருவ
விழியாளே !

-தஞ்சை சதீஷ்குமார்

எழுதியவர் : -தஞ்சை சதீஷ்குமார் (6-Jan-16, 9:03 am)
பார்வை : 78

மேலே