காதல் பயணம்

பச்சை இலையை பற்றிக்கொண்டேன்
அந்த ஒற்றை ரோஜாவின்
காதல் கலையை காண

தடையாய்
நங்கூரம்
நாசகதி செய்தாலும்
உயிர் பாரம் நெஞ்சை
கொய்தாலும்

அண்ட சராசரம் உருண்டாலும்
அந்த பூமியே
அந்தரங்கத்தில் பறந்தாலும்
உன் இதழ் கூட்டில்
அமிர்தம் எடுக்க
ஆயத்தமாய்
ஆதாம் ஏவாள் உலகத்தில்
சஞ்சரித்தேன்

அங்கே புரியாத மொழியில் நீயும்
நானும் பேச
சங்கமிப்போம்
தினம்தினம் சலித்திடாத

இந்த
காதல் பயணத்தில் !

-தஞ்சை சதீஷ்குமார்

எழுதியவர் : -தஞ்சை சதீஷ்குமார் (6-Jan-16, 9:13 am)
Tanglish : kaadhal payanam
பார்வை : 74

மேலே