நம்பிக்கை

அன்னையின் நம்பிக்கை
என் அன்பில் இருக்கிறது...
தந்தையின் நம்பிக்கை
என் தன்னம்பிக்கையில் இருக்கிறது..
உறவின் நம்பிக்கை
என் உணர்வில் இருக்கிறது..
நட்பின் நம்பிக்கை
என் நலத்தில் இருக்கிறது..
குருவின் நம்பிக்கை
என் இலக்கில் இருக்கிறது..
என் இமைகளின் நம்பிக்கை
என் விழிப்பயணத்தில் இருக்கிறது...
என் உதட்டின் நம்பிக்கை
என் சொற்களில் இருக்கிறது..
என் நினைவின் நம்பிக்கை
என் பத்து விரல்களை ``நம்பி``க் கை யில் இருக்கிறது.

எழுதியவர் : (6-Jan-16, 9:33 am)
Tanglish : nambikkai
பார்வை : 98

மேலே