நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ....
நான் யாரோ....
இதுவரை முகம் கண்டதில்லை...
முகநூலில் நாமிருவரும் இணைந்தது...
தமிழாலே....
எண்ணங்களை மாற்றிக்கொண்டோம்...
அவ்வப்போது...
தன்னை தானே திட்டிக்கொண்டோம்...
உயிரெழுத்தாய் உணர்வுகள் ஒன்றானதா...
உயிருக்குள் நட்பு உருவெடுத்ததா...
நிகழ்வுகள் எல்லாம் நினைவாய் நின்றது...
நினைவுகள் எல்லாம் கனவாய் வந்தது...
பார்வை பாராமல் பாசம் தந்த பந்தம்
பல நாள் பேசியிருப்போம்...
இன்று...
ஒரு நொடி பேசிட தவமிருக்கேன்..
இந்த நொடி எனக்கு..
காரணமும் தெரியவில்லை..
பிரிந்தோமா என்று புரியவில்லை..
மீண்டும் முகநூலில் இணைந்திருந்தும்...
நீ யாரோ...
நான் யாரோ...