முதுமை

தெருவிலே ஆரம்பித்த
இந்த வாழ்க்கை பழம்
பிறப்பை உணர்த்திவிடவே
இதழ் குவிந்த வார்த்தை
தொண்டையில் நின்று கொண்டே
தலை கால் புரியாது ஆட்டி
வைத்த பொம்மையை
போலே இன்நிலை

தளர்ந்த கை ,கால்கள்
குளிர் காற்றை ஸ்பரிசிக்க
முடியாது நிலத்தை தழுவிய
படி வானத்தை பார்த்த வண்ணம்
விழிகள் புலம்பி செல்லும்
காற்றிடம் ஏதோ கதை பேசும் - இது தான்
முதுமையா ?

எழுதியவர் : துளசி (6-Jan-16, 6:51 pm)
Tanglish : muthumai
பார்வை : 1009

மேலே