love

என் இதயம் வாங்கிக்கொண்டு,
திரும்பி தர மறந்துவிட்டாய்......,
என் சிரிப்பை பெற்றுக்கொண்டு,
வலிகளை தந்து விட்டாய்!!

"உன்னை பிரிவேன்" என்று
சொன்னால் கூட......
உடலை விட்டு உயிர் பிரிவேன்
என்கிறது!!

உன் சிரிப்பு அதை பார்த்தபின்னே,
என் பிறப்பு ஓர் அர்த்தம் பெற்றது!
இரவு நிலவு என்னை சுட்டெரிக்கிறது,
நீ என்னுடன் பேசாமல் இருந்தால்....

'நீ என்னிடம் என்ன பேசுவாய்' என்று
நான் நினைக்கும் வார்த்தைகளை...
எனக்குள் நானே பேசி கொள்கிறேன்.....

"பைத்தியக்காரன்என்று உலகம் சிரிக்க'-நீ
வைத்தியம் செய்ய வருவாயென காத்துகிடக்கிறேன்!

பூவின் வாழ்வு ஒருநாள் எனினும்,
புன்னகை தந்தே மறித்து போகிறது!
உன் மடிமேல் எனக்கு சில மணிதுளி எனினும்,
இதயம் தந்திட மனம் மறுப்பதில்லை!!

உன்னுடன் சண்டை இட,
நான் துடிக்கிறேன்!!
சண்டையிட்டால் தானே....சமாதனபடுத்த
உன்னை கொஞ்ச முடியும்!

வியர்வை கூட தித்திக்கிறது-உன்
விழிகளை நினைத்து திக்குமுக்காடும்போது ,
என் சைக்கிள் கூட benz ஆகிறது,
உன் நினைவை சுமந்து செல்லும் போது!!

பாதியில் பிரிய போகும்
உறவு என தெரிந்தும்!!
முழு மனதையும் பரிகொடுதேன்......

பரவாயில்லை...கண்கள் இருக்கிறதே -என்
வாழ்நாளெல்லாம் உன் பின்பத்தை பிரேதிபளிக்க !!

எழுதியவர் : கன்தாசன் (8-Jan-16, 3:14 pm)
பார்வை : 243

மேலே