வரிசை வரிசையாய்
வரிசைகள் தான் ..எங்கும்..
வரிசைகள்தான்..இங்கும்..
வரிசையில்தான் ..நானும்..
யமுனைத் துறைவனை
மாலனை , அயனை, பிரம்மனை
அம்மனை ..சிலரும்..
இயேசுவை ..நபிகளை
மறைபொருளாய் வணங்கிடும்
எம் சோதரரும் ..
வரிசைகளில் தான் வருகிறோம்
நாடும் அமைதி பெற
நாளும் .. பொலிவுற!
இடையில் கலைகின்ற வரிசை
எதனால் ..யாரால் ..எதற்கென
தேடிட விளங்குதோர் உண்மை!
இங்கே ஒரு வரிசையில் நிற்பவன்
இன்னொரு வரிசை மேல்
கல்லெறிதல் காண்கிறேன்..!
கலவரம், அச்சம், அடக்குமுறை
எதனையும் கைக்கொள மாந்தர்
மிருகமாய் மாறுதல் காண்கின்றேன்!
அவரவர் வரிசை அழகுடன்
நகருதல் அமைதி ஈந்திடும்
நிலை வரவே வேண்டுகின்றேன்!