புண்ணியம் பழமொழி கவிதைகள் - பாகம் - 1
பண்ணிய புண்ணியம்
பயிரிலே தெரியும்!
புண்ணியம் பண்ண
பயிரை வளர்க்கணும்!
பயிரை வளர்க்க
மனமும் வளரும்!
தான் வளர்த்த செடியில்
மொட்டொன்று அவிழ்கையில்
நம் மனமும்
மணம் கொள்ளும்!
திரும்ப திரும்ப
புண்ணியம் தேடும்
பயிர்களும் செழிக்கும்!