பாட்டி சொல்லாத கதை

பாட்டி சொன்ன கதை
அறிவர் புவியில் அனைவரும்..
இது என் பாட்டி சொல்லாத கதை..
அவரிடத்தே நான் சொல்லும் கதை..

பெற்றெடுத்தவளுக்கு பிரசவம் பார்த்தாய்...
காணும் போதெல்லாம்
கன்னத்தில் இதழ் பதித்தாய்...
பாட்டி உன் பெயரைச்சொல்லி
என் தலைமுறைக்கொடியில் ஓர் இலை
வாழ்ந்தது..
வாடியது...
காலத்தின் ஓட்டத்தால்
இன்று காணாமல் போனது..
வெற்றிடம் ஒன்று
உருவாகியிருக்கிறது..
நீ வாழ்ந்த இடத்தில மட்டுமல்ல..
உன்னை நினைத்த இதயத்திலும் தான்..
இனி நீ வாழ்ந்த திசை வரத்தேவையில்லை..
என் வரவை எதிர்பார்க்கும் அன்பு அங்கில்லை..
உன்னை எண்ணி ஏங்க வேண்டியதில்லை..
கண்டதும் கட்டியணைக்கும் காதல் இனி இல்லை..
போகட்டும்..
நிஜத்தை தொலைத்த நான்
இனி உன் நினைவுகளோடு வாழ்ந்து கொள்கிறேன்..
கயவரால் மட்டுமல்ல
அதை காலனாலும் களவாட முடியாதல்லவா..

எழுதியவர் : தீபாகுமரேசன் (10-Jan-16, 10:47 am)
பார்வை : 152

மேலே