மதுவும் மனிதனும்

நாடும் வீடும் ஒருங்கே
அழிவது உன்னாலே
நீ யார்/ உன்னால் என்ன சுகம்/
போதை ஒன்றை நீ கொடுத்து
போக்கிரிகள் பொறுக்கிகள்
குடிகாரர் திருடர் காவாலிகள்
உருவாகிட வழி வகுத்திடாதே
மதுவே நீ ஒதுங்கி விடு
மக்களை மனிதராக வாழ விடு
மது நீ ஒழிந்து விட்டால்
மக்களும் நாடும் நலம் பெறும்
மக்களுக்காக மக்களால் உருவாக்கப் படும் நீ
மக்களை அழித்து விடாதே
மதுவாக மட்டும் வாழ்ந்துவிடு
மனிதனை உனக்கு அடிமைப் படுத்தாதே
உன்னால் உலகம் சீரழிவதை
பார்த்து நீயே கூனி குறுகி விடு
மனிதன் மயங்கும் நிலை உன்னால் வேண்டாம்,

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Jan-16, 3:20 pm)
பார்வை : 190

மேலே