சொந்தங்கள்

விண்ணுக்கு நிலவு
நிலவுக்கு தாரகை
தாரகைக்கு மேகம்
மேகத்திற்கு மழை
மழைக்கு பூமி
பூமிக்கு காற்று
காற்றுக்கு மரங்கள்
மரத்திற்கு இலைகள்
வாசத்திற்குப் பூக்கள்
ராகத்திற்குப் பறவைகள்
நீருக்கு நதி
நெருப்புக்கு தணல்
ஒளிக்கு சூரியன்
உப்புக்கு கடல்
நிஜத்திற்கு உண்மை
நீதிக்கு நேர்மை
கடமைக்கு நேரம்
கண்ணியத்திற்கு நாணயம்
உயிருக்கு மூச்சு
நாவிற்கு நற்பேச்சு
உயர்வுக்கு பணிவு
பொறுமைக்கு புத்தகம்
குறைக்குத் தீங்கு
நிறைவுக்கு நம்பிக்கை
அழகுக்கு குழந்தை
அன்புக்கு அன்னை
அறிவுரைக்கு தந்தை
ஆற்றலுக்கு ஆசான்
உயிர்ப்பிற்கு உதரம்
உதிரத்திற்கு சகோதரம்
காதலுக்கு மனைவி
கனிவிற்கு கணவன்
ஆளுமைக்கு அரசு
தோழமைக்கு நட்பு
உறவாகும் சொந்தங்கள்
உயர்வாகும் பந்தங்கள்.
- பிரியத்தமிழ் -