கவிதை

கவிதைகள் வரைகிறேன்,
கண்ணீர் துளிகளோடு,

என் கவிதைகள்........
கற்பனையின் காதலனா?-இல்லை
என் உணர்ச்சியின்,
வெறும் பிரதிபலிப்பா ...?

ஊமை நீதிபதியாய்,
உள்ளே நெஞ்சம்.

என்காதலி பார்வையில் ....
நான் எவனோஒருவன்!
என்வீட்டின் சுவர்களுக்குள்,,,-நான்
ஆயுள்தண்டனை கைதி!

என்னுள் இத்தனைசோகமா?
என்கவிதையில் வியக்கிறேன்.....

என்பேனா எனக்காக,
நீலகண்ணீர் சிந்துகிறது!
அதற்கு கைகுட்டையாய்,
என்கவிதை காகிதங்கள்!

விதிசெய்த பாவம்...
இதில் என்ன நியாயம்?

குழந்தைகள் வாய்விட்டுஅழுவதை.....
ஏக்கத்துடன் பார்க்கிறேன்,
சத்தமில்லா அழுகையால்..
வலிகள் குறைவதில்லை!!

உலகத்தின் வேடிக்கை பாருங்கள்....-கவிதையிலும்
'காதல்' தலைப்பிற்கே பார்வை!!

என்ன செய்ய?
மரணத்தின் வாசல்வரை...
பொறுமையின் கைகளில்..
முத்தம்பதித்தவாறு காத்துருக்கிரேன்!!

எழுதியவர் : கன்தாசன் (10-Jan-16, 11:54 am)
பார்வை : 136

மேலே