மகளுக்கு தந்தையின் பிறந்த நாள் கவிதை

வானகம் தந்த வரம் நீ என்னை
வாழ்விக்க வந்த வளம் நீ
உனுருக உயிருருக வேண்டி நிற்க அந்த இறை
உன்னை மகளாக எனக்கு தந்தனன்
தேனாக மழலையை மொழிந்த நீ
தெவிட்டாத சிரிப்பாலே மயக்கினாய்
மானாக ஓடும் ஓட்டத்தில் என்
நெஞ்சத்தை கவர்ந்தாய் நீ
இந்த பூமியில் நீ வளர வளர
என் மேன்மையும் தானே வளர்ந்தது
இன்றோடு
நீ பிறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்தும்
இன்னும் உன் மழலையும் தளிர் நடையும் தானே
கண் முன்னே நிற்கிறது
அன்று நீ பேசிய வார்த்தைகள்
இன்று வரை என்னுள் இனிமை பரப்பி நிற்கிறது
என்னுள் இனிக்கும் அமுதமே
என் ஆவியில் கலந்த தேனே
உன்னுடைய இந்த பிறந்த நாள் நீ
எந்நாளும் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகிறேன்
உன்னை விட்டு
விலகாமலே உன்னோடு என்றென்றும்
உறைந்திட வேண்டாது வேண்டுகிறேன்
இறையே நீ அருள்க அருள்கவே

எழுதியவர் : சக்தி ச ரவிச்சந்திரன் (10-Jan-16, 6:32 am)
பார்வை : 2934

மேலே