கிராமங்கள்
சேவல் கொக்கரிக்கும் முன்பே
கோலமிடும் குமரிகள்
நான்கு சுவற்றிற்குள் அல்லாமல்
நாலாபுறமும் நீந்தி விளையாடி குளியல்கள்
குளத்தில் உலை குழப்பும் சிறுசுகளை
விரட்டியடிக்கும் பெருசுகள்
தட்டானை பிடித்து நூல் கட்டி
பட்டம் விடும் வாண்டுகள்
மார்கழி பனியிலும்
தலை நினைக்கும் ஆயாக்கள்
அத்தை வீட்டு
இரவல் குழம்பின் சுவை
வசந்த காலத்தில் கண்கானா திசையிலிருந்து
கூவும் குயிலின் இசை
வாழைப்பழத் தோலை தெருவில் வீசாமல்
கன்றிர்க்கு தரும் பாசம்
ஆடொன்று நான்கு குட்டி ஈனுகையில்
குட்டிகளுக்கு புட்டிப் பால் ஊட்டும் நேசம்
அடைமழை காலத்தில்
தவளைகளின் அடாவடி சத்தம்
அந்தி மாலையில்
ஆநிரைகளின் மணியோசை
வாகன இரைச்சல்கள் அற்ற
இதமான இரவுகள்
நிலத்திலிருந்து பிடுங்குகையில்
வெளிப்படும் நிலக்கடலை மனம்
தை மாத காற்றில்
தவழ்ந்து வரும் கதிரின் மனம்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
ஜாதிகள் மட்டும் இல்லையெனில்
இந்த கிராமங்கள் தான் எத்தனை அழகு.