புதிய புயல்

கறந்த பால் மடி புகாது
மறைந்த நாட்கள் திரும்ப வராது
சொல்லிய சொற்கள் திரும்பாது
செய்த பாவங்கள் அழியாது
ஆற்றாத கடமைகள் கரை சேர்க்காது!
வாழும் நாட்களில்
ஒவ்வொரு நாளும்
நல்லவராக வாழவேண்டும்
ஒரு நாள் மட்டுமல்ல!
பேசும் பேச்சில்
செய்யும் செயல்களில்
அக்கறை கலந்தால்
எக்கறையிலும் பிழைத்திடலாம்!
பழையவை நினைத்து வருந்தாமல்
புதிய புயலாய் புறப்படலாம்!